Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* அல்வா பதம் தவறிவிட்டால் சோளமாவை சிறிது கரைத்து கலவையில் விட கெட்டியும் கூடும். சுவையும் கூடும். எல்லா வகை அல்வாவிற்கும் சோளமாவு கைகொடுக்கும்.

* பாயசத்தில் திராட்சைக்கு பதில் பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்துப் போட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

* வற்றல் குழம்பு, மிளகுக் குழம்பு செய்தவுடன் அப்பளம் பொரித்து சின்னச் சின்ன துண்டங்களாக போட்டால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.

* சூப்பில் போட பிரெட் துண்டுகள் இல்லாதபோது, ஜவ்வரிசி வடாம் பொரித்து, உடைத்து துண்டுகளாக்கி சூப்பில் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.

* எலுமிச்சம் பழத்தை சற்று நேரம் சுடு நீரில் ஊறவைத்து பிழிந்தால் சாறு அதிகம் கிடைக்கும்.

* வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலையும் சேர்த்துக் கொண்டால் சுவை சூப்பராக இருக்கும்.

* இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் சிறிது எண்ணெயில்லாமல் வறுத்த ரவையை கலந்து அரைமணி நேரம் ஊறியபின் இட்லி வார்த்தால் சுவையாக இருக்கும்.

* பலகாரங்கள் நமத்துப் போகாமல் இருக்க அது வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் அடியில் உப்பு கல் ஓரிரண்டு போட்டு வைத்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.

* வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக் கொண்டு கூட்டு, பொரியல் செய்யும் போது கடைசியாக மேலே தூவி இறக்கினால் வாசனையாக இருக்கும்.

* பஜ்ஜி மாவில் நான்கைந்து பூண்டுபற்களை அரைத்து ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து பஜ்ஜி செய்தால் சுவை அப்படி இருக்கும்.

- எஸ். சடையப்பன்