Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

*புளியாரைக் கீரைக்கும் புளிப்பு ருசி உள்ளதால் சமையலின் போது புளியைக் குறைத்து சமைக்க வேண்டும்.

*தெர்மாஸ் பிளாஸ்கை எத்தனை முறை கழுவினாலும் ஒரு வித கெட்ட வாடை அவ்வப்போது இருக்கும். முட்டையின் வெள்ளைக் கருவை நீரில் கரைத்து அதைக் கொண்டு பிளாஸ்கை இரண்டு மூன்று தடவை கழுவினால் கெட்ட வாடை வருவது அகன்று விடும்.

*மீன் சமைத்த பாத்திரத்தை எவ்வளவுதான் துலக்கினாலும் மீன் வாடை இருந்து கொண்டே இருக்கும். அதனை போக்க சிறிதளவு சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை துலக்கினால் மீன் வாடை முழுவதும் போய்விடும்.

*சூடான உணவுப் பொருட்களில் எலுமிச்சைச் சாற்றை சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் உணவுப் பொருள் கசந்து விடும். சூடு நன்கு ஆறிய பின்னரே சேர்க்க வேண்டும்.

*தேங்காய் மூடி மீதம் இருந்தால் அதில் கல் உப்பைப் போட்டு வைத்தால் தேங்காய் கெட்டுப் போகாது.

*பால் காய்ச்சும் பாத்திரத்தில் ஒரு சிறிய கோலியைப் போட்டு அதில் பால் காய்ச்சினால் பால் பொங்கி வழியாது.

*பலாப்பழத்தை நறுக்கி சுளை எடுப்பதற்கு முன் கையிலும், கத்தியிலும் எண்ணெய் தடவிக் கொண்டால் பழத்தில் உள்ள பால் கைகளில் ஒட்டிக் கொள்ளாது.

*ஆவியில் வேக வைத்து எடுத்தவை எளிதில் ஜீரணம் ஆகும். இம்முறையில் சத்துக்களும் வீணாவதில்லை். எண்ணெயில் பொரித்து எடுக்கும் பொருட்கள் எளிதில் ஜீரணம் ஆகாது.

*வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.

* மழைநாளில் சாம்பார் பொடி அரைக்கும் போது கொஞ்சம் உப்பு போட்டு அரைத்தால் பூசணம் வராது.

- எல். நஞ்சன்.