Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

*பாயசம் வைக்கும்போது முந்திரி கைவசம் இல்லாவிட்டால் தேங்காயை பல்லு பல்லாக உடைத்து நெய்யில் சிவக்க வறுத்து பாயசத்தில் போட்டால் முந்திரி தோற்றுவிடும்.

*பஜ்ஜி மாவில் நான்கைந்து பூண்டுபற்களை அரைத்துப் போட்டால் கூடவே சீரகப்பொடி தூவினால் சூப்பராக இருக்கும்.

*காய்ந்த தேங்காய் துருவ சிரமமாக இருந்தால் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பின் துருவினால் எளிதாக இருக்கும்.

*மல்லிகைப் பூவை அனலில் காட்டி மார்பில் கட்டினால் தாய்ப்பால் சுரப்பது நின்றுவிடும்.

*சப்பாத்தி செய்யும்போது ஒரு கைப்பிடி மைதாவும், ஒரு கைப்பிடி கேழ்வரகு மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

*ஒரு டம்ளர் அரிசியுடன் ¼ பங்கு வறுத்த கொள்ளுப்பருப்பு சேர்த்தால் ¼ பங்கு சீரகம், சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கஞ்சி செய்து மோர் ஊற்றி சாப்பிட்டால் காலை உணவு முடிந்து விடும். வயிறும் நிரம்பும். உடலுக்கும் நல்லது.

*பட்டுப்புடவையில் கறை ஏற்பட்டால் யூக்களிப்டஸ் தைலம் தேய்த்தால் கறை காணாமல் போய்விடும்.

*பூரிமாவு பிசையும்போது பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்த்து பூரி செய்தால் மொறு மொறுவென இருக்கும்.

*தலையணை உறையில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கு நீங்க உப்பு, எலுமிச்சைச்சாறு, வெந்நீரில் கலந்து துவைக்கலாம்.

* இட்லிப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு மிக்ஸியில் அரைத்தால் வெங்காய சட்னி தயார்.

*வத்தல்குழம்பு செய்யும் போது வத்தல் குழம்புப் பொடியை எண்ணெயில் வதக்கி, பிறகு புளியைக் கரைத்து ஊற்றினால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

*குழம்பு அல்லது கூட்டு செய்யும் போது அதில் அரிசிமாவைக் கரைத்து விடுவோம். அதற்குப் பதில் கோதுமை மாவைக் கரைத்துவிட்டால் ருசியாக இருக்கும். குழம்பில் பருப்பு குறைவாக இருந்தாலும் தெரியாது.

*அரைக்கீரை சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.

*வாணலியில் எண்ணெய் சூடானவுடன் அதில் வாழைப்பழத்தோல், கொய்யா இலை, சிறிது புளி, வினிகர் தவிர மற்றவற்றை எடுத்துவிட்டு பலகாரம் செய்யலாம். எண்ணெய் பொங்கி வழியாது.

*தயிர்வடைக்கு உளுந்தை அரைக்கும் போது மாவின் அளவிற்கு எற்ப பாதி அல்லது முழு வாழைப்பழம் சேர்த்துச் செய்தால் வடை சாஃப்டாகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும்.

*வடைமாவுடன் ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்து வடை செய்தால் அதிக மொறு மொறுப்புடன் டேஸ்ட்டாக இருக்கும்.

*சேமியா உப்புமா செய்வதற்கு முன்பு சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பிறகு உப்புமா செய்தால் சூப்பராக இருக்கும்.

- விமலா சடையப்பன்.