Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

* பட்டுச் சேலைகள் வைக்கும் அலமாரியில் ஒரு கைக்குட்டையில் சென்ட் தெளித்து வைக்கவும். புடவை எப்போதும் நல்ல மணமாக இருக்கும்.

* வாரம் ஒருமுறை மிக்சி கப்பில் வெந்நீர் விட்டுக் கழிவு வெயிலில் காய வைத்தால் மசாலா வாடை போய்விடும்.

* வடை சிப்ஸ் செய்யும் முன் எண்ணெயில் பத்துத் துளி எலுமிச்சை சாறு கலந்தால் எண்ணெய் குறைந்த அளவே செலவாகும்.

* சிறிது நீரில் உப்புப் போட்டு ஊறவைத்து பாத்திரத்தை கொதிக்க வைத்து பின்பு கழுவினாலும் பாத்திரம் பளிச்சென இருக்கும்.

* பலகாரங்கள் வைக்கும் டிரம்மில் பலகாரத்துடன் கல் உப்பை போட்டு வைத்தால் நமத்துப் போகாது.

* துவரம்பருப்பு வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் வெந்தயத்தூள் கலந்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

* மல்லிகை முல்லைச் செடிகள் செழிப்பாக வளர அவற்றின் இலைகளை உருவி அந்தச் செடிக்கே உரமாகப் போட்டால் செழித்து வளரும்.

* இரண்டு ஸ்பூன் உளுந்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து பஜ்ஜி செய்யும் மாவில் கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

* பாகற்காய் பொரியல் செய்யும்போது ஒரு மாங்காயும் பொடியாக நறுக்கி சேர்த்து செய்ய பொரியல் கசப்பாகவே இருக்காது.

* எறும்புகள் அதிகமாக வந்தால் கற்பூரத்தை பொடி செய்து போட்டால் அவை மீண்டும் வராது.

- எஸ். சடையப்பன்.