Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

16 ஆண்டுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்

வட்டெக்சாஸ்: பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16வது சுற்றில், ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் டெக்சாஸ் நகரத்தில் நடந்தது. கால்பந்து ரசிகர்களும், கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களும் மிகவும் எதிர்ப்பார்த்த போட்டி இது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் போட தீவிரம் காட்டின. ஆனால், இரு அணிகளின் தடுப்பாட்டத்தில் முதல் பாதியில் யாராலும் கோல் போட முடியவில்லை.

2வது பாதியில் இரு அணிகளின் கோல் முயற்சி பலன் அளிக்கவில்லை. இருப்பினும் போட்டியில் சுவாரஸ்யம், பரபரப்பு கடைசி நேரம் வரை நீடித்தது. போட்டி இறுதி கட்டத்தை எட்டியதால் இந்த போட்டி டிராவில் முடியும் என எதிர்ப்பார்த்தனர். 90 நிமிட முடிந்தும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரம் (காயம் ஏற்பட்டதால் வழங்கப்படும் நேரம்) 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

91 நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெரன் டொரெஸ் அசிஸ்ட் செய்ய மிகேல் மெரினோ தலையால் முட்டி ஒரு கோல் அடிக்க ஸ்பெயின் முன்னிலை பெற்றது. இறுதியில் போர்ச்சுக்கலால் கோல் அடிக்க முடியாததால் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. 2010ல் உலகக்கோப்பையை வென்ற பிறகு ஸ்பெயின் முதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் காலிறுதியில் பெல்ஜியத்துடன் ஸ்பெயின் மோத உள்ளது.