தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் சிறையில் திடீர் ஆய்வு செய்த நீதிபதிகள்: கைதிகளுக்கான வசதி குறித்து தமிழக அரசுக்கு பாராட்டு

Advertisement

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் ஆகியோர் நேற்று முன்தினம் புழல் சிறையில் திடீரென சோதனை நடத்தினர். இந்நிலையில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை நேற்று நீதிமன்றத்திற்கு அழைத்த நீதிபதிகள், புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டதாக தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள், முன்கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் புழல் சிறையின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்றே சோதனை நடத்தினோம். அப்போது சிறையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்தபோது அந்த பகுதிகள் முழுமையாக தூய்மையாக இருந்தன. கைதிகளுக்கான உணவை சாப்பிட்டு பரிசோதித்து பார்த்தபோது உணவு தரமானதாகவும், சுவையாகவும் இருந்தது. கொடுங்குற்றத்திற்காக சிறையில் அடுக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்த போது அவர்களும் சிறை வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்தனர்.

அரசின் இந்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. சிறை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மேலும் சில யோசனைகளை வழங்க இருக்கிறோம். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்கின் மூலம் எந்த ஆலோசனைகளை வழங்கினாலும் அதனை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. சிறைகளின் வசதிகளை தமிழக அரசு சர்வதேச தரத்தில் உயர்த்தியுள்ளோம். கோவை மத்திய சிறையில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலை மூலம் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

Advertisement