புஷ்பா 2 படம் பார்க்க தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் சென்றதால் பயங்கரம் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி: மகன் உயிர் ஊசல்
அப்போது, நடிகர் அல்லு அர்ஜூன் அங்கு வந்தார். அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து ஓடினர். இதனால், தள்ளுமுள்ளு காணப்பட்டது. இதில் பாஸ்கர் குடும்பத்தினர் சிக்கினர். கீழே விழுந்த அவர்கள் மேல் ஏராளமானோர் விழுந்தனர். இதில் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இதனால் சினிமா தியேட்டர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரேவதி, ஸ்ரீதேஜ் இருவரும் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரேவதி ஏற்கனவே இறந்து விட்டதாகவும் ஸ்ரீதேஜ் சுயநினைவில்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். காவல்துறையினர் நடிகர் அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள், தியேட்டர் உரிமையாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.