பஜாஜ் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட என்எஸ்125 ஏபிஎஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 124.45 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இது அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 12 எச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 11 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த ஏபிஎஸ் வேரியண்டில் சிட்டி ஸ்டிரீட்ஸ், ஹைவேய்ஸ் மற்றும் சேலஞ்சிங் ரோட்ஸ் என 3 ரைடிங் மோட்கள் உள்ளன.
புதிதாக பியர்ல் மெட்டாலிக் வெள்ளை நிறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் டிஸ்பிளே நேவிகேஷன் வசதி, எஸ்எம்எஸ் அழைப்புகள், எந்த கியரில் உள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி என அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.98,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
