Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் இடம் திடீர் இடமாற்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியின் இடம் திடீரென மாற்றப்பட்டுள்ளது. ஆயுதப்படை மைதானத்தில் முதல்வர் பங்கேற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறஇருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவோடு இரவாக ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டைசி நேரத்தில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பின்னர் பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்துவைக்கிறார். புதுக்கோட்டையில் அரசு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் வருவதையொட்டி 4,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சர் வருகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முதலமைச்சர் பயணிக்க கூடிய சாலை உள்ளிட்ட 13 இடங்களில் செயல்படக்கூடிய மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோட்டிலும் நாளை முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் இடம் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சி, பெருந்துறை காந்தி சாலையில் உள்ள மண்டபத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.