புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரியில் இன்று நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியதாவது: தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாமெல்லாம் ஒன்னுதான், சொந்தம்தான். அதனால் இந்த விஜய் தமிழகத்துக்க மட்டும்தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீங்க, புதுச்சேரி மக்களுக்கும்தான் குரல் கொடுப்பார். வேறொரு அரசியல் கட்சி நடத்துகிற நிகழ்வாக இருந்தாலும், பாரபட்சம் காட்டாமல் பாதுகாப்பு கொடுத்து இந்த அரசு நடந்துகொண்டது. அதற்காக புதுச்சேரி அரசுக்கும், முதல்வருக்கும் இந்த நேரத்தில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எதையுமே கண்டுகொள்ளவில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கை மட்டுமல்ல... இங்கு வளர்ச்சிக்கும் துணை நிற்கவில்லை என கேள்விப்படுகிறோம். மாநில அந்தஸ்து வேணும் என பலமுறை கேட்டு, சட்டசபையில் பல முறை தீர்மானம் போட்டு அனுப்பி வைத்துக் கொண்டே இருக்காங்க. ஆனால், ஒன்றிய அரசு ஒன்னுமே செய்யல. இங்கு ஒரு அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இந்த இடத்துக்கு இன்ெனாருத்தரை நியமித்து 200 நாள் ஆகிடுச்சு. இன்னும் அவருக்கு இலாகா ஒதுக்கல. இது சிறுபான்மை மக்களை அவமானப்படுத்தும் செயல் என அந்த மக்களே சொல்றாங்க. தமிழ்நாட்டை ஒதுக்கிற மாதிரி புதுச்சேரியை ஒதுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். புதுச்சேரியில் உள்ள நிலைமைகள் மாற ஒரே வழி மாநில அந்தஸ்துதான். இவ்வாறு அவர் பேசினார்.


