Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுச்சேரி அருகே தியேட்டரில் மக்களுடன் அமர்ந்து 'ஜெயிலர் 2' படம் பார்த்த ரங்கசாமி

புதுச்சேரி: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான `ஜெயிலர் 2’ கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள், பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இத்திரைப்படம், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான தியேட்டர்களில் வசூல் சாதனையுடன் ஓடி கொண்டிருக்கிறது.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் சேதராப்பட்டு அஸ்வின் திரையரங்கில் `ஜெயிலர் 2’ திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள தமிழக பகுதியில் இருந்து ரசிகர்கள் அதிகளவில் வந்து பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் அங்கு இரவு காட்சி ஒளிபரப்பான நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அந்த திரையரங்கிற்கு திடீரென சென்றார். பின்னர் `ஜெயிலர் 2’ திரைப்படத்தை மக்களோடு மக்களாக இருக்கையில் அமர்ந்து கண்டுகளித்தார்.

முதல்வருக்கு நெருக்கமான என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் அவருடன் படத்தை பார்த்து ரசித்தனர். முன்னதாக திரையரங்கின் உரிமையாளர் ராமசாமி மற்றும் பிரசாந்த், அஸ்வின் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை வாசல் வரை வந்து வரவேற்று, பின்னர் வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.