பணியிடங்கள் விவரம்:
1. சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் (ஹியூமன் ஜெனடிக்ஸ்): 1 இடம். வயது: 35க்குள். தகுதி: லைப் சயின்ஸில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. இஇஜி டெக்னீசியன்: 3 இடங்கள். வயது: 30க்குள். தகுதி: கிளினிக்கல் நியூரோ பிசியாலஜி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி அல்லது இயற்பியல்/ எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. நூலக உதவியாளர்: 3 இடங்கள். வயது: 30க்குள். தகுதி: நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. ஆர்டிஸ்ட்: 1 இடம். வயது: 27க்குள். தகுதி: மல்டி மீடியா படிப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர்/டிஜிட்டல் அப்ளிகேஷனில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. போட்டோகிராபர்: 2 இடங்கள். வயது: 27க்குள். தகுதி: போட்டோகிராபியில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர்/வீடியோகிராபியில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
6. ஸ்டெனோகிராபர்: 9 இடங்கள். வயது: 27க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு நிமிடத்தில் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதவும், 50 நிமிடங்களில் ஆங்கிலத்திலும், 65 நிமிடங்களில் இந்தியிலும் கம்ப்யூட்டரில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
7. அசிஸ்டென்ட் இன்ஸ்ட்ரக்டர்: (பஞ்சகர்மா): 4 இடங்கள். வயது: 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பஞ்சகர்மாவில் ஒரு வருட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. மெடிக்கல் ரிக்கார்ட்ஸ் டெக்னீசியன்: 3 இடங்கள். வயது: 27க்குள். தகுதி: ஏதாவதொரு அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் மெடிக்கல் ரிக்கார்ட்ஸ் டெக்னீசியன் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
9. ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட்: 22 இடங்கள். வயது: 27க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் பிரிவில் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
10. ஹாஸ்பிட்டல் அசிஸ்டென்ட்: (பஞ்சகர்மா): 2 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11. முடி திருத்துநர்: 2 இடங்கள். வயது: 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் ஒன்றிய அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பணி எண் 1,2 மற்றும் 3க்கு பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1,180/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.885/-. பணி எண்: 4 லிருந்து 11 வரைக்கும் பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.885/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.590/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
https//nimhans.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (04.03.2026).
