Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தகவல்

சென்னை: மக்கள் பிரச்சனைகளை தீர்க்க த.வெ.க. அரசுடன் இணைந்து செயல்படுவேன். தேவைப்பட்டால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு முதலமைச்சரிடம் கூறுவேன். ஆளுநரிடம், அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் தெரிவியுங்கள், நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனது தான் மிகப்பெரிய பிரச்சனை என்று கூறியுள்ளார்

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர், "மக்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். வாக்களித்த மக்களால் பிரச்சனைகளை உணரவும் முடியும்; தீர்வுகளை சொல்லவும் முடியும். மக்கள் பிரச்சனைகளை தீர்க்க தவெக அரசுடன் இணைந்து செயல்படுவேன். அவசியம் எனில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதல்வரிடம் வலியுறுத்துவேன். அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் கூறுங்கள்.. நாம் இணைந்து செயல்படுவோம். நமது சமூகத்தில் நல்லிணக்கம் இல்லாமல் போதுதான் பெரிய பிரச்சனை" என்று பேசியிருக்கிறார்.

மதுரையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் அர்லேக்கர், சௌராஷ்டிரா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். அங்கு மாணவர்களிடம் பேசிய அவர், "துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது. நதிகளை மீட்டு எடுப்பதும் தேசபக்திதான். மதுரை வைகை நதியை பார்த்தேன். நதி இருக்கிறது.. ஆனால், தண்ணீர் எங்கே? இளைஞர்கள் நதியை மீட்டு எடுக்க முன்வர வேண்டும். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" என்று கூறியிருந்தார். மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகர ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து நலத்திட்டங்களையும் ஆய்வு செய்திருந்தார்.