Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொது கணக்கு குழு விசாரணைக்கு ஆஜராகாத 6 மாநில தலைமை செயலாளர்கள் மீது நடவடிக்கையா..? மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதில்

புதுடெல்லி: 6 மாநில தலைமை செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். தலித் மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை திட்டங்களில் பல மாநிலங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி உபி,கர்நாடகா, பஞ்சாப்,ஒடிசா, பீகார் மற்றும் மபி மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் கடந்த மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில் ஆஜராகும்படி பொது கணக்கு குழு(பிஏசி) உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதில் தலைமை செயலாளர்கள் யாரும் ஆஜராகவில்லை. எனவே பொது கணக்கு குழு விசாரணைக்கு ஆஜராகாத 6 மாநில தலைமை செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பொது கணக்கு குழு தலைவர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில்,பொது கணக்கு கணக்கு குழு தலைவர் வேணுகோபால் அனுப்பியுள்ள கோரிக்கையின் அடிப்படையில் மாநில தலைமை செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வேணுகோபால் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம் குறித்து பரிசீலித்து வருவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.