ஊட்டி : தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளதை கண்டித்து, திமுக தலைவர் ஸ்டாலின் மாவட்டம் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்த வேண்டும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஏடிசி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தலைமை வகித்தார். உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முபாரக், கூடலூர் சட்டமன்ற பொறுப்பாளர் பரமேஷ்குமார், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் ஊட்டி எம்எல்ஏ கணேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், இந்திய கம்யூ.
மாநில குழு உறுப்பினர் பெள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட பொறுப்பாளர் காமராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அனிபா, விசிக மாவட்ட செயலாளர்கள் புவனேஷ்வரன், சுதாகர், திராவிடர் கழக மாவட்ட தலைவர் நாகேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் சிவக்குமார், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அபுதாகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள எஸ்ஐஆர் நடைமுறையை வாபஸ் பெற வேண்டும், தமிழகத்தில் தமிழர்கள் வாக்குகளை பறிக்கவும், வடமாநிலத்தவர்கள் பெயர்களை சேர்க்க திட்டமிட்டுள்ள பாஜ அரசை கண்டித்தும், அதற்கு உறுதுணையாக உள்ள தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், இதற்கு ஆதரவு தெரிவிக்கும் சில எதிர் கட்சிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக சார்பில் மாவட்ட அவைத் தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், லட்சுமி, பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், திராவிட மணி, தம்பி இஸ்மாயில், நகர செயலாளர் ஜார்ஜ், ராமசாமி மற்றும் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
