Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதை கும்பல் தாக்குதலை கண்டித்து பெட்ரோல் பங்க்குகளை ஒருநாள் மூடி போராட்டம்: உரிமையாளர்கள் சங்கம் முடிவு

சேலம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் பங்க்கில் போதை கும்பல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, பெட்ரோல் பங்க்குகளை மூடி ஒரு நாள்வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொது துறை எண்ணெய் நிறுவனங்களில் 7000பெட்ரோல் பங்குகளை டீலர்கள் நடத்துகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கீழ் அரசடியில் உள்ள இந்தியன் ஆயில் பங்க்கில் கடந்த 30ம் தேதி ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்குதல் நடத்தியது.

அவர்கள் மீத நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெட்ரோலிய டீலர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்தள்ளனர்.

இதுகுறித்து தமிழக பெட்ரோலிய டீலர்கள் சங்க துணை தலைவரும், சேலம் மாவட்ட தலைவருமான செல்வராஜ் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் கீழ்அரசடி பெட்ரோல் பங்க்கிற்கு வந்த போதை கும்பல் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருள் வினியோகிக்கும் பங்க் அருகில் சிறுநீர் கழித்ததுடன் ஊழியர் மீது எச்சிலை உமிழ்ந்துள்ளது. இந்த சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் 10 பேர் கும்பல் மோட்டார்சைக்கிளில் வந்து கத்தி, பாட்டிலுடன் வன்முறையில் ஈடுபட்டனர்.

இது ஒரு பங்க்கில் நடந்த சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னை அல்ல. பெட்ரோல் பங்க்குகள் மிகவும் ஆபத்தான எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கையாளும் பாதுகாப்பு விதிதுறைகளின் கீழ் இயங்குபவை.

போதை கும்பலால் பங்க் ஊழியர்கள் மட்டுமல்லாமல் மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பெட்ரோல் பங்க்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை எனில், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். கோரிக்கை மனு தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.