Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் புராஜெக்ட் டெக்னீசியன்

பணி: புராஜெக்ட் டெக்னீசியன்.மொத்த இடங்கள்: 98.

காலியிடப் பகிர்வு விவரம்:

1. புராஜெக்ட் டெக்னீசியன் (பிட்டர் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்): 39 இடங்கள் (பொது-19, எஸ்சி-9, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-7)

2. புராஜெக்ட் டெக்னீசியன் (பிட்டர் எலக்ட்ரானிக்்ஸ்): 43 இடங்கள் (பொது-19, எஸ்சி-9, எஸ்டி-2, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-6)

3. புராஜெக்ட் டெக்னீசியன் (மிஷினிஸ்ட்): 3 இடங்கள் (பொது)

4. புராஜெக்ட் டெக்னீசியன் (ஆப்டிக்கல் வொர்க்கர்): 12 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1)

5. புராஜெக்ட் டெக்னீசியன் (எலக்ட்ரோ பிளேட்டர்): 1 இடம் (பொது).

வயது: 18 முதல் 32க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி யினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ படித்து என்டிசி/என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ராணுவ ஆயுத தொழிற்சாலையில் அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது. குறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiaoptel.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.10.2026.