யானை நடமாட்டம் - தொட்டபெட்டா செல்ல தடை
Advertisement
நீலகிரி: யானை நடமாட்டத்தால் தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 40 பேர் கொண்ட வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தொட்டபெட்டா மலைப்பகுதியில் காட்டு யானை சுற்றித் திரிவதால் இன்று(மே.6) ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
Advertisement