தனியார் பேருந்து கட்டண உயர்வு டிச.30ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை: டீசல் விலை உயர்வு மற்றும் அரசு வழங்கியுள்ள இலவச பயண பாஸ்கள் உள்ளிட்ட பல காரணிகளால் தனியார் பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு தனியார் பேருந்து ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டண உயர்வு தொடர்பாக 950 பரிந்துரைகள் வந்துள்ளது. அவற்றை ஆய்வு செய்து டிசம்பர் 30ம் தேதிக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். அரசின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்ததுடன், அரசு எடுக்கும் இறுதி முடிவை 2026 ஜனவரி 6ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Advertisement