Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காவலர்களை தாக்கிவிட்டு தப்பும் கைதிகள் திக்குத்தெரியாத ஆட்சியில் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்..? எடப்பாடி கேள்வி

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை பியூஸ் (Fuse) பிடுங்கிய நிலையில் இருக்க, தற்போது சிறைத்துறையும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டது. மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் ஹைலைட். எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணா திமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் நிர்மல் குமார் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!

புழல் ஜெயிலுக்கு ஆய்வுக்கு எல்லாம் போனீர்களே..முதல்வர் நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா? கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?

அதிகரிக்கும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம், தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள், சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம், இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!