Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிறையில் நடக்கும் கொடுமைகளை நீதிபதியிடம் சொல்லி சரணடையவே தப்பித்தோம்: கைதி மீனாட்சி சுந்தரம் வீடியோ வெளியீடு

சிறையில் நடக்கும் கொடுமைகளை நீதிபதியிடம் சொல்லி சரணடையவே தப்பித்தோம் என்று கைதி மீனாட்சி சுந்தரம் பேசிய வீடியோ வெளியானது. சந்திக்க மனு அளிப்பவர்களை பார்க்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பிரச்சனை செய்வதற்காக சிறையிலிருந்து தப்பவில்லை. சிறை அலுவலர்கள் அத்துமீறல் குறித்து புகார் அளித்ததால் தனிமைச் சிறையில் அடைத்தனர். தெரியாமல் தவறு செய்துவிட்டதாக பிடிபடுவதற்கு முன்னர் மீனாட்சி சுந்தரம் பேசிய வீடியோ வெளியானது.

அக்டோபர் 2026-ல், தேனி மாவட்ட முதன்மைத் துணைச் சிறையிலிருந்து வார்டனைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தப்பியோட்டச் சம்பவத்தின் பின்னணி குறித்து, தப்பியோடிய கைதிகளில் ஒருவரான மீனாட்சி சுந்தரம் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

தேனி மாவட்ட சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளும் பிடிபட்டனர். கைதிகள் தப்பிக்கத் திட்டமிட்டது எப்படி, இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சிறையில் கைதிகள் துன்புறுத்தப்பட்டதே தப்பிக்கக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில் அக்டோபர் 26ஆம் தேதி இரவு, வலிப்பு வந்ததாக நாடகமாடி உதவ வந்த காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கின. முதற்கட்டமாக 5 பேர் பிடிபட்ட நிலையில், சிறையை சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் ட்ரோன் கண்காணிப்பு மூலம் மேலும் 8 பேர் பிடிக்கப்பட்டனர்.

தப்பி ஓடிய 17 பேரில், 13 பேரை 24 மணி நேரத்துக்குள் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீதமுள்ள நால்வரை பிடிப்பதற்கான தேடுதல் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டன. இந்நிலையில், புதன்கிழமை பகலில் மேலும் இரண்டு பேர் பிடிபட்டனர். ட்ரோன் கண்காணிப்பில் சில கைதிகள் பிடிபட்ட இடத்தில் இருந்து சற்று தொலைவில் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்முத்து, ரெஜின் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.