ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை உயர் நீதிமன்றம் உத்தரவு
11:50 AM Oct 29, 2024 IST
Share
Advertisement
சென்னை: ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் தீவிரமாக கவனிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.