Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

நீண்ட காலம் பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நேருவின் சாதனையை முறியடிக்கும் மோடி: தொடர்ச்சியாக 4399 நாட்கள் பதவியை நிறைவு செய்கிறார்

புதுடெல்லி:ஜூன் 10ம் தேதியுடன் தனது 4399 தொடர்ச்சியான நாட்களை பதவியில் நிறைவு செய்ய உள்ளார் மோடி. இதன் மூலம் இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுவார். கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி முதன்முதலில் பிரதமராக பதவியேற்ற மோடி வரும் 10ம் தேதியுடன் தனது 4399 தொடர்ச்சியான நாட்களை பதவியில் நிறைவு செய்ய உள்ளார். இதன் மூலம், இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952-ம் ஆண்டு மே 13-ம் தேதி பதவியேற்றது முதல், 1964-ம் ஆண்டு மே 27-ம் தேதி அவர் இறக்கும் வரை நீடித்த நேருவின் 4,398 நாட்கள் என்ற சாதனையை மோடி முறியடிப்பார்.

இது மோடியின் அரசியல் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்லைக் குறிக்கிறது. அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை 25, அன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மிக நீண்ட தொடர்ச்சியான பதவிக்காலத்தை முறியடித்திருந்தார். இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 வரை, அதாவது 4,077 நாட்கள், தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின் வியத்தக வளர்ச்சியின் பின்னணியில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் ஜவகர்லால் நேரு நாட்டை வழிநடத்தியபோது, ​​இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 34 கோடியாக இருந்தது. 2014-ல் மோடி பதவியேற்றபோது, ​​மக்கள் தொகை 131 கோடியைத் தாண்டியிருந்ததுடன், அதன் பின் தற்போது 146 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக இந்தியாவில் ஜனநாயகம் மிக பெரும் அளவில் விரிவடைந்துள்ளது. கடந்த 1951-52ல் நடந்த முதல் பொது தேர்தலில் வெறும் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. 2014ல் இதன் எண்ணிக்கை 464 ஆக உயர்ந்தது. கடந்த பொது தேர்தலில் கட்சிகளின் எண்ணிக்கை 744 ஆக அதிகரித்துள்ளது. முதல் பொதுத் தேர்தலின்போது சுமார் 17 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, 2014ம் ஆண்டில் 83 கோடிக்கும் அதிகமாக உயர்ந்திருந்தது.

இரு காலகட்டங்களிலும் நிலவிய அரசியல் சூழல்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தன. நேரு ஆட்சிக்கு வந்தபோது காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய அன்றைய அரசியல் களத்தில், 1952 தேர்தலில் 489 மக்களவைத் தொகுதிகளில் 364 இடங்களை காங்கிரஸ் வென்றது.