Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பிரதமர் மோடிக்கு பவுத்த ஸ்தூபியை அர்ப்பணித்து பூடான் அரசர் கவுரவிப்பு

புதுடெல்லி: பூடானின் கெலேபு மைண்ட்புல்னஸ் நகரில் லஹாபாப் துசென் என்னும் புனித நாளில் நடந்த நிகழ்ச்சியில் 108 பவுத்த ஸ்தூபிகள் சுமார் 6 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி நள்ளிரவு தொடங்கப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க பணியில் சுமார் 40ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ , ‘‘108 ஸ்தூபிகள் கட்டப்பட்டு புனிதப்படுத்தப்பட்டன. மிகவும் புனிதமான 76வது ஸ்தூபியை பிரதமர் நரேந்திரமோடிக்கு பூடான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் அர்ப்பணித்துள்ளார் ” என்று குறிப்பிட்டுள்ளார்.