Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஹார்முஸ் நீரிணையை திறந்து, கப்பல் வழிப் போக்குவரத்தை உறுதி செய்க : ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் வலியுறுத்தல்

டெல்லி : ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது ஈரான் அதிபருக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தன பக்கத்தில்,"ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசி, ஈத் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். இந்தப் பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் என நம்பிக்கை தெரிவித்தேன்.

பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைப்பதாகவும் உள்ள, பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தோம். ஹார்முஸ் நீரிணையை திறந்து, கப்பல் வழிப் போக்குவரத்தை எந்தத் தடையுமின்றி உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய கிழக்கில் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்ததாகவும், அமைதி திரும்ப வேண்டிய அவசியம் குறித்து அவரிடம் ஆலோசித்தேன்."இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.