Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விலையில் திடீர் மாற்றம் தங்கம் பவுனுக்கு ரூ.4,640 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.4,640 குறைந்தது. இதே போல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் சரிவை சந்தித்தது. தங்கம் விலை கடந்த 29ம் தேதி பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 3ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.2,560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,14,160க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. நேற்றுமுன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும், பவுனுக்கு ரூ.5 ஆயிரத்து 40 உயர்ந்து பவுன் ரூ.1 லட்சத்து 19,200க்கும் விற்றது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,320க்கும், பவுனுக்கு ரூ.4,640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,14,560க்கும் விற்றது.  இதேபோல வெள்ளி விலையும் நேற்று சரிந்தது. வெள்ளி விலை கிரா​முக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.300க்​கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து, பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது.