Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் விலை குறைப்பு!

ஓலா நிறுவனம் ரோட்ஸ்டர் என்ற எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. ரோட்ஸ்டர் எக்ஸ் வரிசையில் 3 வேரியண்ட்கள் உள்ளன. புதிய விலையாக 2.5 கிலோவாட் அவர் பேட்டரி வேரியண்ட் ரூ.79,999 ஆக குறைந்துள்ளது. இதுபோல் 3.5 கிலோவாட் அவர் பேட்டரி வேரியண்ட் சுமார் ரூ.92,999, 4.5 கிலோவாட் அவர் பேட்டரி வேரியண்ட் சுமார் ரூ.99,999. ரோட்ஸ்டார் எக்ஸ் பிளஸ் -ல் 4.5 கிலோவாட் அவர் பேட்டரி வேரியண்ட் சுமார் ரூ.1.09 லட்சம், 9.1 கிலோவாட் அவர் வேரியண்ட் சுமார் ரூ.1.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறுகிய கால பண்டிகை சலுகை மட்டுமே என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.