Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,800க்கும், பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,400க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,860க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10,880க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

இதனையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ. 14,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.280க்கு விற்பனையாகிறது.