சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களைக் கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.
அதாவது நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,205க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தங்கம் விலை காலையில் குறைந்த நிலையில், மாலையில் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1,15,200க்கு விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14,400க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை காலையில் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனையான நிலையில் மாலையில் மாற்றமில்லை.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260க்கு விற்பனையாகிறது.



