சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அதாவது நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,600க்கு விற்பனையானது. வெள்ளியை பொறுத்தவரை 7வது நாளாக நேற்று முன்தினமும், மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதனையடுத்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் 1,07,840 க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.160 அதிகரித்த நிலையில் தற்போது மேலும் ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,480க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை காலையில் ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.240க்கு விற்பனையான நிலையில் மாலையில் மாற்றமில்லை.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.250க்கு விற்பனையாகிறது.


