Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

அதாவது வெள்ளிக்கிழமை காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,700க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 9,600க்கும் விற்பனையானது. தங்கத்தை போல வெள்ளி விலையும் காலையில் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2.60 லட்சத்துக்கும் விற்பனையானது.

இதனையடுத்து நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்பட்டது.  தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,700க்கு விற்பனையானது.  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் மாற்றமின்றி கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்று முன்தினம் விலையிலேயே தங்கம் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.140 குறைந்து ரூ.13,560க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்து கிலோ ரூ. 2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.