Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,07,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

இதனையடுத்து தங்கம் விலை நேற்று முன்தினம் காலை கிராமுக்கு ரூ.270 குறைந்து கிராம் 13,030க்கும், பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4240க்கும் விற்றது. வெள்ளி விலை நேற்று முன்தினம் காலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையாது. நேற்று முன்தினம் பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,200க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,600க்கும் விற்றது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்தது.

இதையடுத்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800 விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,100க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கும் விற்பனையானது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலை குறைந்த நிலையில் மாலையில் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை காலையில் ரூ.820 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,200 உயர்ந்து சவரன் ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கும், விற்பனையானது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.250க்கு விற்பனையாகிறது.