Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800 விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800 விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 20ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.13,600 ஆகவும், ஒரு பவுன் விலை ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800 ஆகவும் இருந்தது. 22ம் தேதி பவுன் ரூ.1,08,800க்கும், 23ம் தேதி பவுன் ரூ.1,08,480க்கும், 24ம் தேதி ரூ.1,06,800க்கும், 25ம் தேதி ரூ.1,05,120க்கும், 26ம் தேதி ரூ.1,06,400க்கும் விற்பனையானது.

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை கிராமுக்கு ரூ.70ம், சவரனுக்கு ரூ.560ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 370-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 960-க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70ம், சவரனுக்கு ரூ.560ம் சரிந்தது. அதன்படி, ஒருகிராம் தங்கம் ரூ.13,300க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையானது.

இதனையடுத்து தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.270 குறைந்து கிராம் 13,030க்கும், பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4240க்கும் விற்றது. வெள்ளி விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையாது. நேற்று பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,200க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,600க்கும் விற்றது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்தது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800 விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனையாகிறது.