தூத்துக்குடி: கோவில்பட்டியில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் இனிப்பு, கார வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இனிப்பு வகைகளில் கிலோவுக்கு ரூ.40 வரையிலும், கார வகைகள் கிலோவுக்கு ரூ.20 வரையிலும் விலை உயர்ந்தது. சிப்ஸ், கேக் வகைகள் கிலோவுக்கு ரூ.100 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்க்கரை, நெய் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்ததால் இனிப்பு, கார வகைகள் விலையை உயர்த்தியுள்ளோம் என்று வணிகர் சங்கம் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement



