சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் குறைந்த நிலையில் மாலையில் அதிகரித்து விற்பனை; சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது
சென்னை: தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,200 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,890க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்று காலை குறைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240-க்கும், ஒரு கிராம் ரூ.15,030-க்கும் விற்பனையானது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080-க்கும், ஒரு கிராம் ரூ.15,010-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை காலை, மாலை என 2 முறை குறைந்தது. இதன் காரணமாக சவரனுக்கு ரூ.2,280 சரிந்து, ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும், ஒரு கிராம் ரூ.14,725-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.75 குறைந்து ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காலையில் குதங்கம் விலை குறைந்த நிலையில் மாலையில் உயர்ந்துள்ளது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,200 அதிகரித்துஒரு சவரன் ரூ.1,19,120க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது.



