வேலூர்: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கே.வி.குப்பம் அருகே பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி சென்ற ஹேமராஜை போலீசார் கைது செய்தனர். ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதில் காயமடைந்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில்களில் ஏற்கனவே பல பெண்களுக்கு ஹேமராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
+
Advertisement


