Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற தவெக பிரமுகர்: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியை சேர்ந்த கார் டிரைவரின் மனைவி (25) கர்ப்பிணியாக உள்ளார். நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டின் அருகே காலை கடன் கழிக்க சென்றாராம். அப்போது அங்கு சென்ற யோகேஸ்வரன்(20) என்பவர் அவரை பலாத்காரம் ெசய்ய முயன்றாராம்.

டிப்ளமோ பார்மசி படித்துள்ள ேயாகேஸ்வரன் தவெகவில் உள்ளார். அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி கதறிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி கணவரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த அவரும் உறவினர்களும் பைக்கில் யோகேஸ்வரனை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் யோகேஸ்வரனுக்கு தர்ம அடி கொடுத்து சேத்துப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து யோகேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் யோகேஸ்வரனை பாதிக்கப்பட்ட பெண் தாக்கும் வீடியோ மற்றும் தவெக தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் சத்யா திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் யோகேஸ்வரன் இருக்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.