Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்ப்பிணி பெண், குழந்தை உயிரி*ந்த விவகாரம்: மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்காததால், பிரசவத்தின்போது கர்ப்பிணியின் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மர வியாபாரி ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே ஆறுமுகம் மீது கொத்தடிமைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்த் அளித்த புகாரின் அடிப்படையில் பொன்னேரிக்கரை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆறுமுகம் ஏற்கனவே காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உயிரிழந்த குழந்தையின் உறவினர்கள் மற்றும் மக்கள் அமைப்பினர் நேற்று மாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே தற்போது ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.