தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தபால் துறையில் 2019 இடங்கள்

பணி: கிராமின் டக் சேவக்ஸ்: இப் பணியின் கீழ் 3 வகையான பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Advertisement

1. பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர்ஸ் (பிபிஎம்): இப் பணியில் சேர குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் தபால் நிலைய பொறுப்பாளராக அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதாவது பொதுமக்களுக்கு தபால் துறை சேவைகளை வழங்குவது, பைல்கள் மற்றும் ரிக்கார்டுகளை கையாள்வது, தபால் துறையின் கீழ் செயல்படும் போஸ்ட் பேமென்ட் பேங்க் தொடர்பாக பணிகளை மேற்கொள்வது ஆகியவை ஆகும்.

2. அசிஸ்டென்ட் பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்): 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஸ்டாம்ப்ஸ் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்வது/வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கே சென்று தபால்களை பட்டுவாடா செய்வது/தபால்களை புக்கிங் செய்வது/ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

3. டக் சேவக்: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தபால்துறை பணிகளில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர் ஆகியோருக்கு உதவி செய்ய வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 40க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.

10ம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதுபற்றிய தகவல் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். தகவல் கிடைத்த 30 நாட்களுக்குள் இன்டர்நெட் வசதி, மின் இணைப்புடன் கூடிய கட்டிடத்தை ஜிடிஎஸ்- போஸ்ட் ஆபீஸ் இயக்குவதற்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ தயார் செய்ய வேண்டும்.கட்டிடம் தரை தளத்தில் ஊரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்க வேண்டும். ஒன்றிய அல்லது மாநில அரசுக்கு சொந்தமான கட்டிடமாக இருப்பது விரும்பத்தக்கது. பணி நியமனம் செய்யப்படுபவர்கள், அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவராகவோ இருக்க வேண்டும். சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

1. பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர்- ரூ.12,000- ரூ.29,380.

2. உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர்/ டக்சேவக்- ரூ.10,000- ரூ.24,470.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினர்/மாற்றுத்திறனாளிகள்/திருநங்கைகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.indiapost.gov.in/gdsonlineengagement என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.02.2026.

 

Advertisement

Related News