‘‘வசூல் வேட்டைக்காக தனியாக ஒரு உதவியாளரை வைத்துள்ள அதிகாரி பற்றி பேச்சு அடிபடுகிறதே...’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஊழல் இல்லாத ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் ரீல்ஸ் அரசில், ஒரு அதிகாரி லஞ்சம் வாங்குவதற்காகவே தனியாக ஒரு உதவியாளரை நியமித்து வசூல் வேட்டையில் ஈடுபடுவதுதான் புரம் என முடியும் கடலோர மாவட்டத்தில் செம டாக் ஆக உள்ளதாம்.. இந்த மாவட்டத்தில் கடலாடும் யூனியனில் பணியாற்றும் ஆனந்தமான அதிகாரி, கடந்த 3 ஆண்டாக இங்கு பணியாற்றி வருகிறாராம்..
அவரா இவர் என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு கடந்த சில மாதங்களாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாம்.. தற்போது யூனியன், தலைவர் இல்லாமல் தனி அலுவலர் கட்டுப்பாட்டில் இயங்குவதால் பழைய முகத்தை மாற்றி விட்டு, ரொம்பவே அதிகாரம் காட்டுகிறாராம் ஆனந்தமானவர்.. முறையான டெண்டர் இல்லாமல் வாய்மொழி உத்தரவால் பல்வேறு வேலைகளை செய்து வரும் இவர், உயர் அதிகாரிகளுக்கு தேவையானவற்றை உடனுக்குடன் கவனித்து விடுவதால் இவரை யாரும் கண்டுகொள்வதில்லையாம்..
இதனால், வசூல் வேட்டைக்கு தன்னுடன் எப்போதும் ஒருவரை உதவியாளராக வைத்துள்ளாராம்.. மேலிட சப்போர்ட் இருப்பதால் தன்னை யாராலும் அசைக்க முடியாது என்ற தைரியத்தில் உள்ளதால் இவரது காட்டில் ஒரே பணமழை தானாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குறைகளை தெரிவிக்க செல்லும் மக்களை, நடிகர் கட்சி நிர்வாகி கடிந்து கொள்கிறாராமே...’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கொசுவலை மாநகரை சேர்ந்த நடிகர் கட்சி மாவட்ட பொறுப்பில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவர், தற்போது கெத்து காட்டி வருகிறாராம்.. கட்சி நிர்வாகிகள் யாரையும் அவர் மதிப்பது கிடையாதாம்.. தனக்கு மேலிடத்தில் அதிக செல்வாக்கு இருக்கிறது என பில்டப் செய்கிறாராம்.. கட்சி நிர்வாகிகளை விட, பொதுமக்கள் அவரிடம் சென்று குறைகளை தெரிவித்தால் குறைகளை என்னிடம் வந்து சொல்லக்கூடாது என கடிந்து கொள்கிறராம்..
இதனால் மக்கள் அவரை பார்க்க தயக்கம் காட்டுகிறாங்கலாம்.. சமீபகாலமாக அவரது நடவடிக்கையில் கூட பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இருக்காம்.. இதனால் நடிகர் கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பில் உள்ளவரை பற்றி தலைமையிடத்தில் புகார் அளிக்க முடிவு செய்திருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கலெக்டர் அலுவலகத்துல உள்ள உடல் பரிசோதனை மையம், 20 ரூபா பேட்டரி இல்லாம முடங்கி கிடக்காமே...’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் கலெக்டர் ஆபிசுல, ஏ பிளாக், பி பிளாக் என்று இரண்டு பிரிவு கட்டிடங்கள் இருக்குது. இதுல சுமார் 35க்கும் மேற்பட்ட துறைகள் இருக்குது. இந்த துறைகளில் பல்வேறு காரணங்களுக்காக தினமும் பல நூறு பேர் வந்து போறாங்க. இதுல முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள்னு பலர் வர்றாங்க. இவங்களுக்கும், அலுவலகத்துல பணியில இருக்குற அலுவலர்களுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்றதுக்கு ஏ பிளாக் வரவேற்பறையில ஒரு செவிலியரை நியமிச்சிருக்காங்க..
பரிசோதனை செய்றதுக்கான உபகரணங்களும் கொடுத்திருக்காங்க. ஆனா அந்த உபகரணங்கள் இயங்குவதற்கான பேட்டரி கொடுக்கவில்லையாம்.. கண்காணிப்பு அதிகாரி கிட்ட கேட்டா, உன் சொந்த காசு போட்டு வாங்கிக்கோ, பேட்டரியெல்லாம் கிடையாதுன்னு சொல்றாராம்.. இதனால, கலெக்டர் அலுவலகத்துல பரிசோதனை மையம் இருந்தும் பயனில்லாம இருக்குதாம்.. இந்த அலுவலகத்துல 20 ரூபாய் பேட்டரிக்கு கூடவா காசு இல்லாம போச்சுன்னு மக்கள் திட்டி தீர்த்துட்டு போறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நிதி மந்திரி பட்ஜெட் அறிக்கையுடன் ஜெயமாலையை கொண்டு வந்ததற்கு பின்னணியில் பெரிய திட்டம் இருக்காமே...’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விசில் தலைவர் அரிதாரம் பூசி 34 ஆண்டுகள் தாண்டிவிட்டதாம்.. தன்னை ஒரு கிறிஸ்தவர் என அடையாளப்படுத்திக்கொண்டால், சினிமாவில் தன்னை மக்கள் ஓரங்கட்டி விடுவார்களோ என்ற பயத்தில் அவர் எந்த இடத்திலும் தனது மதத்தை வெளிப்படுத்த வில்லையாம்..
ஆனால், அரசியலுக்கு வந்ததும் தனது முழு பெயர் மற்றும் மதத்தை வெளிப்படுத்தியதுடன், தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சுக்கு சென்று முழங்காலிட்டாராம்.. இதெல்லாம் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காகத்தானாம்.. தற்போது அவரது டேபிளிலும் சிலுவை தான் தொங்குதாம்.. அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிதி மந்திரியும், சபாநாயகரும் கிறிஸ்தவர்கள் தானாம்..
இந்நிலையில், பேரவையில் பட்ஜெட் அறிக்கையை கொண்டு வந்த மந்திரி, ஜெபமாலையுடன் சென்ற விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்காம்.. சொத்து விவகாரத்தில் சொந்த சகோதரன் மீதே இந்த மந்திரி பயங்கர தாக்குதல் நடத்திய வீடியோ வைரலானது. இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்துக்கிட்டிருக்கு. இதனால மந்திரி சிக்கலில் இருக்காராம்..
இதனால், மந்திரி சபையில் இருந்து தூக்கியடிக்கப்படும் பட்டியலில் அந்த மந்திரியும் இருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதனால், விசில் தலைவரின் மனதில் இடம்பிடிக்கவே அந்த மந்திரி இந்த ஜெபமாலை நாடகத்தை அறங்கேற்றியதாக கட்சிக்காரங்க பேசிக்குறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.


