Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மாணவர்களை ரவுடிபோல சித்தரிப்பு தவெக அமைச்சரின் பேச்சுக்கு விசிக அமைச்சர் வக்காலத்து

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதித்துறை சார்பில் தீர்த்தகாடு பகுதியை சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேற்று வழங்கினார்.

அப்போது அவரிடம், அரசு பள்ளியில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் ஜெதீஸ்வரி மாணவர்கள் ரவுடி போல ஹேர் கட் பண்ணி வருகிறார்கள், அவர்களுக்கு மொட்டை அடியுங்கள் என்று கூறியிருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு அமைச்சர் வன்னிஅரசு கூறியதாவது:

மாணவர்களின் முடி குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி, ஒரு அமைச்சராக பேசவில்லை, ஒரு தாயாக பேசுவதாக கூறிவிட்டுதான் பேசியிருக்கிறார். ஒரு தாயின் பார்வையில் இருந்து பேசியிருக்கிறார். நாங்கள் அமைச்சராக இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லை. விடுதிகளில் மாட்டுக்கறி வழங்கப்படும் விவகாரத்தில் மாணவர்கள் விடுதியில் ஆய்வு செய்தபோது அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். முதலமைச்சரிடம் கூறி பரிசீலனை செய்கிறோம் என்று தான் சொன்னோம். இதனை திரித்து மாட்டுக்கறி போட போவதாக அவதூறு விஷம பிரசாரங்களை செய்தனர். அது உண்மை அல்ல. இவ்வாறு தெரிவித்தார்.

பட்டா கேட்டு முற்றுகை

தீர்த்தகாடு பகுதியில் விசிகவினர் பரிந்துரைத்த ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டதாகவும், நீண்ட காலமாக குடியிருக்கும் மக்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறி ஆதித்தமிழர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் தலித்ராஜா தலைமையில் ஏராளமானோர் அமைச்சர் வன்னி அரசுவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.