தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூந்தமல்லி-சென்னீர்குப்பம் சாலையில் மலைபோல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகள்: நோய்தொற்று பரவும் அபாயம்

பூந்தமல்லி: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சி, ஆவடியிலிருந்து திருவேற்காடு செல்லும் பள்ளிக்குப்பம் சாலையில் உள்ளது. சுமார் ஒன்றரை கிமீ தூரமுள்ள பள்ளிக்குப்பம் சாலை வழியே நாள்தோறும் சென்னீர்குப்பம், பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பள்ளிக்குப்பம் பிரதான சாலையில் உள்ள எம்.ஆர். நகர், மாரியம்மன் கோவில் தெரு, நேதாஜி தெரு, அப்துல் கலாம் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளும், பிரதான சாலையில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் உள்ளன. பள்ளிக்குப்பம் பிரதான சாலையின் இருபுறமும், சென்னீர்குப்பம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் ஏராளமான மருத்துவ, பிளாஸ்டிக் உள்பட பல்வேறு கழிவுகள் நாள்தோறும் கொட்டப்பட்டு வருகின்றன. சாலையின் இருபுறமும் மலைபோல் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளில் நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்களில் சிலர் தீயிட்டு எரித்து வருகின்றனர்.

Advertisement

இதனால் அப்பகுதி முழுவதிலும் துர்நாற்றத்துடன் வெண்புகை சூழ்ந்து காணப்படுகிறது. பிரதான சாலையில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வெண்புகை சூழ்ந்திருப்பதாலும், புகைமூட்டத்தினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக ஏராளமான வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி ஆற்றுநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, பள்ளிக்குப்பம் பிரதான சாலையின் இருபுறமும் குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவுவதற்கு முன், அக்குப்பை கழிவுகளை முறையாக அகற்றி, அங்கு தூய்மை மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட மற்றும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

Related News