*தடுக்க வலியுறுத்தல்
நாமகிரிப்பேட்டை : பொன்பரப்பிப்பட்டி அருகே, வனத்துறைக்கு சொந்தமான மலையடிவாரத்தில் மண் வெட்டி கடத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பொன்பரப்பிப்பட்டியில், பொன்சொரிமலை முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அருகே, வனத்துறைக்கு சொந்தமான மலையின் ஒரு பகுதி அடிவாரத்தில், மர்ம கும்பல் சட்ட விரோதமாக மண் வெட்டி, லாரிகளில் கடத்திச்சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வனத்துறைக்கு சொந்தமான பொன்சொரிமலை அடிவாரத்தில், மர்ம கும்பல் ஒன்று பொக்லைன் மூலம் மண்ணை வெட்டி, டிப்பர் லாரிகள் மூலம் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்ததால், மலையில் இருந்து பெரிய கற்கள் உருண்டு விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, மலைப்பகுதியில் சட்ட விரோதமாக மண் வெட்டி கடத்துவதை தடுக்க வேண்டும். மேலும், மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள், அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
