Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொன்னேரி அருகே இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள இந்தியன் ஆயில் எல்பிஜி முனையத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் 6 வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தங்களுடைய போராட்ட வடிவங்களை தின்தோறும் மாற்றி வரக்கூடிய சூழலை இரண்டாவது நாளிலும் அதுபோன்ற நான்காவது நாளிலும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியிருந்தனர். அதைபோல் நேற்றைய தினம் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊழியர்களுடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். அதைப்போன்று அவர்களும் இணைந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், 6வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் பல்வேறு கோரிக்கைகளை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஒருசில கோரிக்கைகளை தவிர பிற கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுப்பதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமான கோரிக்கைகளை ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தொடர்ந்து 6 வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்களுடைய உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் நீடிக்கும் பார்ச்சத்தில் சமையல் எரிவாயுள் சிலிண்டர்கள், வீட்டின் உபயோகத்திற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் வழங்கக்கூடிய இந்தியன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.