வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடக்கம்..!!
சென்னை: வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் போது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடியாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை செயலாளர்கள் கூட்டத்தின் போது வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குசாவடியை வென்றால் தொகுதியை வெல்வோம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் திமுக அதிகபணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் செயல்படுத்த கூடிய திட்டம் வகுக்கபட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள் முதல் வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் வரை அனைவரும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அந்த வாக்குசாவடிகளில் மூத்த திமுக முன்னோடிகள் இருந்தால் அவர்களையும் அழைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் என் வாக்குச்சாவடியின் பகுதி செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். வீடுவீடாக செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினர்களும் வீடு வீடாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்ப்பதுடன் ஒவ்வொரு வீட்டிலும் திராவிட மாடல் அரசின் சாதனையை துண்டறிக்கை வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் முதலமைச்சர் வழங்கினார்.