Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒன்னு நான் விஜய்யை பார்க்கணும்: இல்லைன்னா விஜய் படத்துடன் என்னைய புதைங்க; தவெக மகளிரணி நிர்வாகி அலப்பறை

தென்காசி மாவட்டம், புளியங்குடி மின்வாரிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேச்சாளர்கள் மேடையில் பேசிய நிலையில் ஆண்கள் மட்டும் இன்றி பெண்களும் விசில் அடித்தும் ஆட்டம் ஆடியும் ஆரவாரம் செய்தனர். கூட்டத்தில் பேசிய நகர மகளிர் அணி அமைப்பாளர் அருள்ஜோதி, ‘நான் சாவுறதுக்கு முன்னாடி விஜய்யை பார்க்கனும். அது நடக்கவில்லை என்றால், ஒரு வேலை எனக்கு ஏதாவது ஆகி விட்டால் அல்லது இயற்கையாக இறந்து விட்டால் என்னை யாரும் எரித்து விடக்கூடாது புதைக்க வேண்டும். என்னை புதைக்கிற குழியில் விஜய் போட்டோவை கூட வைக்க வேண்டும்.

என்னோட குடும்பத்தில் இருப்பவர்கள் மறந்து விட்டார்கள் என்றாலும் தளபதி எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும். நான் தனியாள் கிடையாது. அதனால அவருடைய பெயரை என்னுடைய கையில் பச்சை குத்தியிருக்கிறேன். என்னோட ரேஷன் கார்டில் விஜய் பெயரை சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் விஜய் யார் என்று கேட்டனர். நான் யாராக இருந்தால் என்ன சேர்க்க வேண்டும் என்றேன், உடனே அவர்கள் அவரின் ஆதார் கார்டு கொண்டு வாருங்கள் என்றனர். இங்கு மேடையில் இருக்கும் நபர்கள் யாராவது விஜய்யின் ஆதார் கார்டு வாங்கி கொடுங்கள் என்று அலப்பறை செய்தார்.