Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஜந்தர் மந்தரில் கூடி போராடிய இளைஞர்களின் குரலே நம் தேசத்தின் குரல் - பிரியங்கா காந்தி

டெல்லி: ஹாக்கி இந்தியா தேசிய அணியின் சீருடை நிறம் காவியாக மாற்றப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பதில் அளித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியில் இருப்பவர்கள் சீருடைகளை மாற்றினாலும் சரி, அல்லது கல்விக்கொள்கை மூலம் வரலாற்றை மாற்றியெழுத முயன்றாலும் சரி, அவர்களை பற்றி நம் நாட்டு இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

ஜந்தர் மந்தரில் கூடியிருந்த நம் நாட்டின் இளைஞர்கள் இந்த ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து என்ன சொன்னார்கள் என்பதை நம் நாடே கேட்டதல்லவா.!! அது அவர்களின் குரல் மட்டுமல்ல, .இந்த தேசத்தின் குரல். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்தப் பங்கும் இல்லை. மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரஸ் கட்சி சுதந்திரத்திற்கான இயக்கத்தை முன்னின்று நடத்தியது.

நம் நாட்டினுடைய ஆன்மாவானது அகிம்சை, உண்மை மற்றும் சகோதரத்துவத்தில் வேரூன்றியுள்ளது. அதை யாராலும் பறிக்க முடியாது. எவ்வளவு தான் பிரிவினையை தூண்டினாலும், வெறுப்பைப் பரப்பினாலும், சகோதரத்துவம், பரஸ்பர அன்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டுள்ள நம் நாட்டின் ஆன்மா அப்படியே நிலைத்திருக்கும் என்றார்.