Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசியல்ல நடிச்சா மக்கள் ஏற்க மாட்டாங்க... ரூ.200 டிக்கெட்டை ரூ.2,000க்கு விற்றவர் யோக்கியராக பேசுவதா? விஜய் மீது ராஜேந்திரபாலாஜி விளாசல்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக எப்போதும் யாரிடமும் அடிமையாக இருந்தது கிடையாது. அதிமுக-பாஜ கூட்டணி ஒரு அன்பான கூட்டணி. கனிந்த மரத்தில் தான் கல்லடிபடும். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என பெருவாரியான பத்திரிகை கணிப்புகள் சொல்வதை பொறுக்க முடியாதவர்கள் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்து வருகிறார்கள். 200 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்பவர்களெல்லாம் யோக்கியர் போல் பேசி வருகிறார்கள். எம்ஜிஆர் நடிகராக இருந்தார். அரசியலில் நடிக்கவில்லை. இன்றைக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். அரசியலில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நேர்மையாக, உண்மையாக நடந்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

அதிமுக, பாஜ உறவானது நட்பு ரீதியான உறவு. தமிழகத்திற்கு தேவையான நிதிகளை ஒன்றிய அரசிடமிருந்து கேட்டு பெறுகின்ற உரிமையும் கடமையும் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. நாங்கள் கேட்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற இடத்தில் ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் இருக்கிறார்கள். அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். இவ்வாறு தெரிவித்தார். அதிமுக ஊழல் கட்சி என விஜய் மீண்டும் விமர்சித்த நிலையில், 200 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்பவர்களெல்லாம் யோக்கியர் போல் பேசி வருகிறார்கள் என ராஜேந்திரபாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.