Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேசிய பாதுகாப்பு தோல்விக்கு பொறுப்பேற்று மோடி, ராஜ்நாத் சிங் பதவி விலக வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே எழுதிய ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற வெளியிடப்படாத நினைவு குறிப்பு நூலில், தேசிய பாதுகாப்பு முடிவெடுப்பதில் உள்ள பலவீனத்தையும், சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் காட்டப்பட்ட கோழைத்தனத்தையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது. ஜெனரல் நரவணேயின் புத்தகத்தை உடனடியாக வெளியிட வேண்டும்.அதன் உள்ளடக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோருகிறது. இந்தியாவின் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டைச் சமரசம் செய்து, ஜனநாயகப் பண்புகளைச் சீரழித்த மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு நாட்டை ஆளும் தார்மீக உரிமை இல்லை.அவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.