Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

என்னை ஆதரித்த இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்: முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி

திக்ஹா: இந்தியா கூட்டணி க்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இதற்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர்(எஸ்பி) சரத்பவார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள திக்ஹா கடலோர நகரத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘என்னை ஆதரித்ததற்காக இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.